இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வைத்தியசாலையில் அனுமதி!
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.
வயிற்று தொற்று காரணமாக அபிஷேக் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரச்சனையைக் கண்டறிய சில சோதனைகள் செய்யப்படுகின்றன. இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.





