உலகம்

மெக்சிகோவின் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி!

மத்திய மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 12 பேர் காயமடைந்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்பந்து போட்டியின் நிறைவில் சம்பவ இடத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நகரத்தில் அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களை அடிகோடிட்டு காட்டுவதாக கூறிய நகர மேயர்,  வன்முறையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் (Claudia Sheinbaum)  வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!