மும்பையில் 2 மாத நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞன் கைது
வடக்கு மும்பையில்(Mumbai) உள்ள மலாட்டில்(Malad) இரண்டு மாத நாய்க்குட்டியை பாலியல் ரீதியாகத் தாக்கி, அதை அடித்ததாகக் கூறி 20 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மலாட் பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் நடந்ததாக குரார்(Kurar) காவல் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விகாஸ் பெசகர் பாஸ்வான்(Vikas Peshagar Paswan) என்ற இளைஞர் நாய்க்குட்டியை கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து பின்னர் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு வழிப்போக்கர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நாய்க்குட்டி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தற்போது கால்நடை மருத்துவரின் பராமரிப்பில் உள்ளது.





