மகாராஷ்டிராவில் 21 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தற்கொலை
மகாராஷ்டிராவின்(Maharashtra) நாசிக்கில்(Nashik) 21 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு, தனது பெற்றோருக்கு குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
“மன்னிக்கவும். நான் உங்களை நேசிக்கிறேன் அம்மா அப்பா” என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திக்ஷா திரிபுவன்(Diksha Tribhuvan) வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை குடும்பத்தினர் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிலிருந்தே மாற்றுத்திறனாளியாக இருந்த 21 வயது பெண் அமைதியானவர் மற்றும் நட்பானவர் என்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான ஒரு நிறுவனத்தில் படித்து வருவதாகவும் தீக்ஷாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.





