சிவன் ஆலாயம் இடிக்கப்பட்ட விவகாரம் – அருத்ட்தந்தை சக்திவேல் கண்டனம்!
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.
இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கின் பிரதேசங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முனைவதும் , சிங்கள பௌத்த பிரதேசங்களாக அடையாளப்படுத்த முனைவதும் நாம் அறிந்ததே.
நாட்டின் எல்லா சந்திகளிலும், உயர்ந்த மலைகளிலும் புத்தர் சிலைகளை அமைக்கும திட்டமிட்ட செயல் தொடர்கின்றது. மலையக பிரதேசம் ஆக்கிரமிக்கும் நோக்கில் இச் செயற்பாடு தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றது.
இவற்றிற்கும் மேலாக குருந்தூர் மலைப்பிரதேசத்தில் எத்தகைய கட்டிட பணிகளும் நடக்கக் கூடாது எனும் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை அமைக்கும் பணி முடிவுறு நிலையில் உள்ளது. இதுவும் இராணுவத்தின் உதவியுடன் என்பது தெரிய வந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் தொல்லியல் திணைக்களம், நீதித்துறை என்பன சட்டங்களுக்கு வெளியில் என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.