இலங்கை செய்தி

எரிபொருள் விலைகளில் திருத்தம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!