இலங்கை

சர்வதேச அழுத்தங்களுக்கு பணியாத தலைமை – ரணிலை பாராட்டும் ஐதேக

வெளிநாட்டுச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதனால்தான் நாட்டு நலன் கருதி அவர் பின்னால் அணி திரண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவருக்குப் பதவி முக்கியம் அல்ல. ஜனாதிபதிப் பதவி, பிரதமர் பதவி என எந்தப் பதவியைக் காட்டியும் அவரை அடிபணிய வைக்க முடியாது. பதவிகள் இல்லாமல் வீட்டில் இருப்பார். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டார்.

நாம் ஏன் ரணிலின் பின்னால் நிற்கின்றோம் என சிலர் கேட்கின்றனர். வெளிநாட்டுச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவர்தான் அவர். இதுதான் பிரதான காரணம் என்பதை கூறிக்கொள்கின்றேன் – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!