தெற்கு அரசியலில் திருப்பம் – நேரடி சந்திப்புக்கு தயாராகும் ரணில், சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ளவர்கள் பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றன.
எனவே, பொதுவேலைத்திட்டத்தின்கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்றுவருகின்றது.
அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
ஒரு கட்சிகளும் ஒரு கட்சியாக இணைவதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைந்து, பொது சின்னத்தில் – பொதுபட்டியலின்கீழ் தேர்தல்களை சந்திப்பது பற்றி தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.