கரூர் விவகாரம் – புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய தீவிரம் காட்டும் பொலிஸார்!
கரூரில் விஜய்யின் தேர்தல் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கு ஆளும் கட்சியை பலர் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்று முக்கிய புள்ளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய பொலிஸார் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை பொலிஸார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)





