நீதிமன்றின் உதவியை நாடினார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ
தம்மைக் கைது செய்வதைத் தடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் ஆவர்.
மனுதாரர்கள் தம்மை சட்ட விரோதமாக கைது செய்ய தயாராகி வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவு வழங்க வேண்டும் என்று போதகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இந்த நாட்டுக்கு வந்தவுடன் தம்மை கைது செய்வதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்திய ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.