October 22, 2025
Breaking News
Follow Us
இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

சிரியாவில் மறுபிறவி எடுத்த சிறுவன் – சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற தழும்புடன் பிறந்த குழந்தையைப் பார்த்ததுமே, அவர்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள், இது நிச்சயம் முன் ஜென்மத்தில் அந்தக் குழந்தைக்கு நேரிட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்புதான் என கூறியிருந்தனர்.

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் இருக்கும் ஏதேனும் அடையாளம், அதன் முந்தைய ஜென்மத்தில் அது பெற்றதாக இருக்கும் என்பது ட்ரூஸ் இன மக்களின் நம்பிக்கையாகும்.

இது மூட நம்பிக்கை இல்லை என்று, அந்தக் குழந்தை வளர்ந்து பேசும் ஆற்றல் பெற்ற போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தான் முன்ஜென்மத்தில் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்றதும் சிறுவனுக்கு அனைத்தும் நினைவில் வந்து, முன்ஜென்மத்தில் தனது பெயர் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்.

அந்த கிராமத்தினரும், சிறுவன் சொல்லும் பெயரில் இருந்தவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

அப்போதுதான், அந்த சிறுவன், தன்னைக் கொன்றுவிட்டதாகவும், அவர்களை பெயர்களையும், யார் என்ற விவரத்தையும் கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகள் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே சிறுவன் தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, அங்கு ஒரு எலும்புக்கூட இருந்ததும், அதன் மண்டைஓட்டில் கோடாரியால் வெட்டிய தடயம் இருந்ததும், அதே அடையாளம், சிறுவனின் நெற்றியில் இருந்ததையும் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்னனர்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

(Visited 545 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்