ஐரோப்பா

பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் – சிக்கிய 76 பேர்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் மேற்கொண்டிருந்த 76 அகதிகள் கலே கடற்பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு இக்கடற்பயணத்தை பா-து-கலே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அகதிகள் மேற்கொண்டிருந்தனர்.

காற்று ஊதக்கூடிய படகு ஒன்றில் குறித்த 76 அகதிகளும் பயணித்திருந்தனர்.

அகதிகளின் கடற்பயணத்தை பார்த்துவிட்டு ஜொந்தாமினர் தகவல் தெரிவிக்க, அவர்களை சட்டவிரோத கடற்பயணத்தை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பான Cross Gris-Nez அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு மிக அதிகமான அகதிகள் கலே மற்றும் நோர் மாவட்டங்களின் கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தனர்.

அதன் போது 76 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலி எண்ணிக்கை அதிகரித்தாலும் அகதிகள் தங்களது பயணங்களை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்