இலங்கை மக்களுக்கு விசேட எச்சரிக்கை – சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவதானம்
இலங்கை மக்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைமைக்குள்ளாகியுள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்தோடு, 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.
201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கொழும்பு நகரில் காற்றின் தரம் 108 முதல் 116 வரை காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.