இலங்கை

அநுர அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவு – சஜித் அறிவிப்பு

இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்துக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாடாக நாம் தற்போது எதிர்நோக்கி வரும் சிரமங்களை போக்கக்கூடிய வல்லமை தற்போதைய அரசாங்கத்துக்குக் கிட்டியுள்ளது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமது ஆட்சிக்காலத்தில் அவர்களது கொள்கைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்திக்குள்ள சவாலாகும்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நாட்டு மக்களின் அபிலாஷைகளைக் கட்டியெழுப்பும் இயலுமை தேசிய மக்கள் சக்திக்கு உதயமாக வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தின் அடிப்படையிலான மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும், சமூக நீதியைப் பாதுகாக்கும் நல்லாட்சிக்காக புதிய அரசாங்கத்துக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்