3 பிரித்தானிய விமான நிலையங்கள் விற்பனை – கொள்வனவு செய்யும் ஜெர்மனி நிறுவனம்
பிரித்தானியாவில் உள்ள 3 விமான நிலையங்கள் ஜெர்மனியின் AviAlliance நிறுவனத்திற்கு விற்கப்படவுள்ளன.
AviAlliance ஜெர்மனியில் விமானநிலைய நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற நிறுவனமாகும். அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை பில்லியன் பவுண்ட் என தெரியவந்துள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த Ferrovial, ஆஸ்திரேலியாவின் Macquarie ஆகிய நிறுவனங்கள் Aberdeen, Glasgow, Southampton ஆகிய நகரங்களில் உள்ள மூன்று விமான நிலையங்களின் நிர்வாகத்தைக் கவனித்துவந்தன.
அந்த மூன்று விமான நிலையங்களையும் ஆண்டுதோறும் 10.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
அடுத்த ஆண்டு (2025) முதல் காலாண்டில் ஒப்பந்தம் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)