ஸ்பெயினில் அடுத்த பேரிடருக்கு தயாராகுமாறு அறிவித்தல்!
ஸ்பெயினில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு பேரிடருக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல சுற்றுலா தளமான மஜோர்க்கா lockdown முறை மூலம் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வீடற்ற மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தேசிய வானிலை சேவையான ஏமெட், சுமார் மூன்று மணி நேரத்தில் 120 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 40 times, 1 visits today)