இலங்கை செய்தி

திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள்

உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என  தெரிவித்த ஜனாதிபதியொருவரும் இருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவித்துள்ளதாவது

வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார்.

இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார். இது எனக்கு நடந்துள்ளது.

நான் பிரதமராக இருந்த வேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள்.

அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்.

எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.

உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன்.

அந்த நபருடன் சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வந்திருந்தார்.

இளவயதிலிருந்து விழுமியங்களை கற்றுக்கொடுப்பதற்கு முயலவேண்டும், ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம்.

உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள் ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவிக்கும் ஜனாதிபதியொருவரும் இருந்தார்.

See also  காசாவுக்கு இரண்டு வாரங்களாக உணவு கிடைக்கவில்லை

அவர் இதனை தனது அமைச்சரவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், தனது கட்சிக்காரர்களிற்கும் தெரிவித்துள்ளார்.

அனைவரும் திருடினார்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த அமைப்புமுறையே நாட்டை சீரழித்தது.

அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தகர்கள் இலஞ்சம் வழங்க முன்வருவார்கள்.

பரந்துபட்ட ஊழல் நாட்டை இறுதியில் வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லும் என தெரிவித்தார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content