வட அமெரிக்கா

டிரம்பின் பிரசாரக்கூட்ட இடத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 12ஆம் திகதியன்று கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரசாரக்கூட்டம் நடத்தினார்.

பிரசாரக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் துப்பாக்கியுடன் இருந்த நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டிரம்ப்பைப் பாதுகாக்க பணியமர்த்தப்பட்டிருந்த அதிகாரிகள் அந்த நபரைரைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.அந்த நபர் வைத்திருந்த துப்பாக்கிக்குள் தோட்டாக்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நபர் கைது செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

டிரம்ப்பிற்கும் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர் லாஸ் வேகசைச் சேர்ந்த 49 வயது வெம் மில்லர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 2ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)
See also  அமெரிக்காவின் மிகப் பெரிய எதிரி ஈரான் - கமலா ஹாரிஸ்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content