பொழுதுபோக்கு

விஜய் கூட நடிச்ச எல்லாத்தையும் கட் பண்ணிட்டாங்க… பிரபல நடிகை வருத்தம்

தளபதி விஜய் இயக்குனர் அட்லி இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் நடித்து படங்களை மெகா ஹிட் வெற்றி படங்களாக மாற்றினார்.

தெறி திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு “மெர்சல்” மற்றும் “பிகில்” ஆகிய இரண்டு திரைப்படங்களில் அட்லியோடு இணைந்து தளபதி விஜய் பயணித்திருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுமே வசூல் ரீதியாக மெகா ஹிட் வெற்றியை பெற்றது.

அது மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகை பொருத்தவரை இதுவரை பிளாப் கொடுத்திடாத இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவரின் காட்சிகள் முழுமையாக கத்தரி போடப்பட்டுள்ளது.

அது குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசியவர் மிகவும் வருத்தத்துடன் பேசி இருக்கிறார். இருப்பினும் காட்சிகளின் நீளம் கருதியே அந்த காட்சிகள் வெட்டுப்பட்டதாகவும், தனக்கு தெரிந்தது தான் அது நடந்தது என்றும் அவர் கூறுகிறார்.

See also  24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் சேதுபதியின் ரீல் மகள்... காரணம் இதுதானா?

அந்த நடிகை வேறு யாரும் அல்ல, சின்னத்திரை மூலம் கலை உலகில் அறிமுகமாகி, இன்று மிகப்பெரிய வெள்ளித்திரை நட்சத்திரமாக மாறி இருக்கின்ற தேவதர்ஷினி தான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” திரைப்படத்திலும் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை தேவதர்ஷினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தளபதி விஜயோடு “மெர்சல்” திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் ஒரு செவிலியராக நான் நடித்திருந்தேன்.

விஜயோடு தான் முழுக்க முழுக்க எனக்காக காட்சிகள் வரும். குறைவான காட்சிகள் என்றாலும் சில காட்சிகள் காமெடியாகவும், சில காட்சிகள் மிகவும் எமோஷனலாகவும் அமைக்க பெற்றிருந்தது.

என்னுடைய கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் ஒரு நல்ல பெயரை பெரும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெர்சல் திரைப்படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக் காட்சி மட்டுமே சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் என்னுடைய காட்சிகள் மொத்தமாக வெட்டப்பட்டது. அதற்காக இயக்குனர் அட்லீ என்னிடம் பர்சனலாக வருத்தம் தெரிவித்ததும் உண்டு என்று கூறியிருக்கிறார் நடிகை தேவதர்ஷினி.

See also  தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள் - குவியும் வாழ்த்துக்கள்

(Visited 4 times, 4 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content