இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும்: அனுரகுமார

கடந்த தேர்தல்களை விட வேட்பாளர்களின் கொள்கைகள் மீது மக்கள் அதிக கரிசனையுடன் இருப்பதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
NPP கொள்கை மையத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் கொள்கைகள் மற்றும் அறிக்கைகள் அந்தந்த துறைகளில் உள்ள நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறினார்.
NPP தனது கொள்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நிபுணர்களுடன் கலந்துரையாடியதாக திஸாநாயக்க கூறியதுடன், NPP கொள்கைகளில் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பங்களிக்க ஆர்வமுள்ள எந்தவொரு நபருக்கும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொள்கை மையம் ஒரு தளத்தை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)