22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை பயணத்துடன் விடை பெற்ற ஆண்டர்சன்
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இவருக்கு இரு அணி வீரர்களும் பிரியா விடை கொடுத்தனர். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
இவரது ஓய்வுக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி விடைக் கொடுத்தனர். ஆண்டர்சன் கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து வெளியேறினார்.