ஐரோப்பா

பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழ்ப் பெண்

பிரிட்டன் பொது தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை(04) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் தியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர்கட்சி, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தேர்தலில் அதிகளிவில் இந்தியர்க்கள் போட்டியிட்டனர்.இந்த நிலேயில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெறும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகளை மட்டுமே பெற்று 4வது இடத்தை பெற்றார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின்னர் இல்கிஙாந்துக்கு குடிபெயர்த்துள்ளனர். லண்டனில் பிறந்து வளர்ந்த அவர்,அங்கேயே படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

2007 -2009 வரையில் சுகாதார மற்றும் பராமரிப்பு நிறுவனங்களுக்கான பணியாளர் வல்லுநர்களுக்காக பணியாற்றினார். 2009ம் ஆண்டு முதல் 2010 வரை தொழிலாளர் கட்சி MP டான் பட்லரின் நாடாளுமன்ற ஆராய்்சியாளராகவும்,வழக்கறிஞராகவும் இருந்தார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்