இலங்கை

இலங்கையில் தந்தையின் உதவியோடு காதலனை கடத்திய 17 வயது யுவதி!!

மஹகம – பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளை அவர் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது .

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த இளைஞன் அவரது காதலியின் வீட்டில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர் .

இந்த இளைஞனை பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தை இன்று (17) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content