ஐரோப்பா

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள தடைகள் குறித்துப் பேசிய புட்டின், சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அதன் மக்களும் நெருக்குதலுக்குப் அடிபணியமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்தத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்காது. மாறாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளே பாதிப்படையும் என அவர் குறிப்பிட்டார்.

உலகச் சந்தையில் எண்ணெய் இருப்பு கணிசமாகக் குறையும்போது விலைகள் உயரும். சர்வதேச எண்ணெய் விலைகள் ஏற்கெனவே 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரேனில் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், புட்டினின் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்தார்.

புட்டின் அப்படி நினைப்பதில் மகிழ்ச்சி. 6 மாதங்களில் மீண்டும் இது தொடர்பில் பார்த்துக் கொள்ளலாம் என டிரம்ப் சவால் விடுத்தார்.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்