இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி
கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீவிர தேடுதலில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





