உலகம்

பொலிவியாவில் விமான விபத்து : 15 பேர் பலி!! தெருவெங்கும் பணமழை!

  • February 28, 2026
  • 0 Comments

பொலிவியாவின்  (Bolivia) தலைநகர் அருகே நேற்று சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் பயணித்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிவியாவின் தலைநகர் லா பாஸில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் மேற்படி வாகனத்தில் பயணித்தவர்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பொலிவிய விமானப்படைக்குச் சொந்தமான ஹெர்குலஸ் என்ற விமானம்  மத்திய வங்கியிலிருந்து பிற நகரங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை […]

ஐரோப்பா

இத்தாலியில் டிராம் தடம் புரண்டு விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

  • February 28, 2026
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரில் டிராம் ஒன்று தடம் புரண்டதில் இருவர் உயிரழந்துள்ளதுடன், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாலியின் நிதித் தலைநகரில் உள்ள ஒரு முக்கியப் பாதையான விட்டோரியோ வெனெட்டோ அவென்யூவில் (Vittorio Veneto avenue) நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஓட்டுநர் தண்டவாளங்களை மாற்றத் தவறியதாகவும், அதிவேகத்தில் பயணித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், மிலன் மேயர் பெப்பே சாலா (Beppe Sala) மனிதத் தவறுதான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். மிலன் பொதுப் போக்குவரத்து நிறுவனமான ஏடிஎம், […]

இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டைக்கொலை – இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

  • February 27, 2026
  • 0 Comments

அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குறித்த நபர் தெற்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் பல்வேறு கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இவ்வாறு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐரோப்பா

ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றும் பிரித்தானியா!

  • February 27, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இங்கிலாந்து தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது. மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு உதவுவதற்கான அதன் திறன் இப்போது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நேரில் தூதரக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.    

இலங்கை

அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது தரங்கிணி கப்பல்!

  • February 27, 2026
  • 0 Comments

இந்திய கடற்படையின் பயிற்சி கப்பலான INS தரங்கிணி இன்று (27) பயிற்சிகளுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. அஷ்ரப் துறை முகத்துக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிக் கப்பல் வருகை தந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மார்ச் 02 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் 06 முதல் 09 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் நங்கூரமிடப்படும் […]

உலகம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் : அமைதிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா!

  • February 27, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். தாலிபான்களின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காபூல், காந்தஹார் மற்றும் பாக்டியா மாகாணங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடன் ‘வெளிப்படையான போரை’ அறிவித்து, அவர்களின் பொறுமையின் எல்லையை எட்டியதாகக் கூறினார். அத்துடன் மேற்படி தாக்குதலில் குறைந்தது 13 பொதுமக்கள் […]

விளையாட்டு

நியூசிலாந்து இங்கிலாந்துக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

  • February 27, 2026
  • 0 Comments

2026 டி-20 உலக்க கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் […]

இலங்கை செய்தி

ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ட்ரோன் கேமராக்கள் நன்கொடை

  • February 27, 2026
  • 0 Comments

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் , வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ட்ரோன் கேமராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. JICA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் நிலையான வீதிப் போக்குவரத்திற்காக மண்சரிவுத் தடுப்பு திறனை வலுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், JICA பிரதிநிதி நோரு மட்சுனோஷிட்டா (Mr. Noru Matsunoshita), வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. ரி. பாஸ்கரனிடம் அடையாள ரீதியாக […]

அரசியல் இலங்கை

நிலக்கரி மோசடி: நம்பிக்கையில்லாப் பிரேரணை கோருகிறது மஹிந்த அணி!

  • February 27, 2026
  • 0 Comments

“தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP வலியுறுத்தியுள்ளது. அநுராதபுரத்தில் இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மொட்டு கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi இவ்வாறு வலியுறுத்தினார். “ தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க […]

இலங்கை செய்தி

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாடலில் தீர்வு கிடைக்காது – செல்வம் அடைக்கலநாதன்

  • February 27, 2026
  • 0 Comments

மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள், மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இடமபெற்றது. மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) மதியம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிஜாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த […]

error: Content is protected !!