இலங்கை செய்தி

டெல்லி, கொழும்பு உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் (Hyderabad House) இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்துகொண்டனர். இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று […]

இந்தியா தமிழ்நாடு

ஓ.பி.எஸ்சுக்கு தி.மு.க. வலை!

  • February 20, 2026
  • 0 Comments

தமிழக சட்டப் பேரவைக்குரிய தேர்தல் நெருங்கும்வேளை கூட்டணி அமைக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை M.K. Stalin , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் OPS இன்று (20) சந்தித்து பேச்சு நடத்தியமை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “ ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

பொன்சேகா வெத்து வேட்டு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

“ முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா Sarath Fonseka கூறும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தெரிவித்துள்ளது. மக்களுக்காக அரசியல் செய்யும் நபர் அவர் அல்லர் எனவும், பகைமை அரசியலையே முன்னெடுத்துவருகின்றார் எனவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. இறுதிப்போரின்போது புலிகள் சரணடைவதற்கு மஹிந்த ராஜபக்ச சந்தர்ப்பமளித்தார் என பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது. எனினும், இராணுவத்தினரிடம் சரணடைய சொன்னதால் அத்திட்டம் தோல்வி அடைந்தது […]

உலகம்

சூடானில் உணவு கொண்டு சென்ற லொறிகளை குறிவைத்து தாக்குதல் – மூவர் பலி!

  • February 20, 2026
  • 0 Comments

சூடானின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது மூன்று உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுக்லி (Kadugli) மற்றும் டில்லிங் (Dilling ) நகரங்களுக்குச் செல்லும் வழியில் இந்த தாக்குதல்  நேற்று நடத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் மனிதாபிமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனிதாபிமானப் படைகளை வேண்டுமென்றே குறிவைத்ததை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். இது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் […]

உலகம்

இந்தோனேசியா மீதான இறக்குமதி வரியை குறைத்தது அமெரிக்கா!

  • February 20, 2026
  • 0 Comments

இந்தோனேசியா மீது விதிக்கப்பட்ட 32 சதவீத வரியானது 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், விவசாயம், சுகாதாரம், கடல் உணவு, தொழில்நுட்பம் மற்றும் கார் உள்ளிட்ட 99 சதவீதமான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க மக்களின் நலன்களை முன்னேற்றும் அதே வேளையில் “வர்த்தக தடைகளை உடைக்கும்” என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் (Jamieson Greer) கூறியுள்ளார். இதேவேளை தென்கிழக்கு ஆசிய நாட்டின் அரிய மண் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் அழுத்தம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி issa Kuttiarachchi இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும்.” – […]

உலகம்

வேற்று கிரகவாசிகள் பற்றிய கோப்புக்களை வெளியிட ட்ரம்ப் உத்தரவு!

  • February 20, 2026
  • 0 Comments

வேற்று கிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) தொடர்பான அரசாங்க கோப்புகளை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் அதனை உண்மை என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஒபாமாவின் கூற்று தவறானது எனக் கூறிய ட்ரம்ப் தற்போது அனைத்து கோப்புக்களையும் வெளியிட பணிப்புரை விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளியும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இச்சந்திப்பின்போது, […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 50 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : வெள்ள அபாய எச்சரிக்கை!

  • February 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்ன்வாலில் ( Cornwall) உள்ள கார்டின்ஹாம் (Cardinham) என்ற கிராமத்தில், 50 நாட்களாக தொடர்ந்து மழைப் பெய்துள்ளது.  டிசம்பர் 30 முதல் 441.4 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. வழக்கமான மழைப்பொழிவை விட இம்முறை அதிகளவிலான மழைப் பொழிவு பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  குறிப்பாக ஸ்காண்டிநேவியா பகுதியில் அதிகமான வெள்ளம் பதிவாகியுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதிகளும் இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்துக்கு 67 வெள்ள எச்சரிக்கைகளை […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் மிக முக்கிய சுற்றான சூப்பர் 8 super 8 சுற்று நாளை (21) ஆரம்பமாகின்றது. இதற்கமைய சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 22 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கண்டி பல்லேகல மைதானத்தில் முற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அன்றைய […]

error: Content is protected !!