உலகம் செய்தி

அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வெனிசுலாவில் 379 அரசியல் கைதிகள் விடுதலை

  • February 21, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் ஏகமனதாக பொது மன்னிப்பு சட்டமொன்றை ஏற்றுக்கொண் நிலையில் இந்தச் சட்டத்துகக்கமைய, 379 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சட்டமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் அரேசா (Jorge Arreaza) இதனை அறிவித்துள்ளார் இவர்கள் இன்றிரவு முதல் நாளை காலை வரை விடுவிக்கப்படலாம். பொது மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அதிகாரிகளால் இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய பணக் கொள்ளை – இன்னும் தீர்வு கிடைக்காதது ஏன்?

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளை சம்பவமாக கருதப்படும் செக்யூரிட்டாஸ் டிப்போவி [Securitas Depot] கொள்ளை இடம்பெற்று20 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் வழக்கு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி ஆம் திகதி 21 அன்று, கென்ட் [Kent] பகுதியில் உள்ள டொன்பிரிட்ஜ் [Tonbridge] நகரில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. ஆயுதங்களுடன் வந்த கும்பல், முகாமையாளரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்தினர். பின்னர் அவரை பயன்படுத்தி பணம் […]

இலங்கை செய்தி

மாத்தறை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் பலி

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. காரொன்றில் வருகை தந்த இருவர் இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மி.மீ ரகத்தைச் […]

உலகம்

உறுதியானது ட்ரம்பின் சீன விஜயம்: திகதியும் நிர்ணயம்!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்க US ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன China விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான திகதி விபரமும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப், பீஜிங் Beijing செல்வார் எனவும், ஏப்ரல் 02 ஆம் திகதிவரை அங்கு தங்கி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் கடந்த 4 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் Xi Jinping தொலைபேசியில் உரையாடினார். இதன்போது சீனா வருமாறு ட்ரம்ப்புக்கு அழைப்பு […]

ஐரோப்பா

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!

  • February 21, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து இன்று பிரித்தானியாவின் பங்குச் சந்தை குறியீடுகள் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளூ-சிப் FTSE 100 நிறுவனத்தின் பங்குகள்  10,745.76 புள்ளிகளில் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் பங்குச் சந்தை குறியீடு 0.5% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ட்ரம்ப் வரிகளை விதிக்க மாற்று முறைகளைத் தேடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதை சந்தைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்புடைய […]

இலங்கை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

4000 ரூபாயால் மீளவும் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சுமார் 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்றைய  நிலவரப்படி 22 காரட் பவுண் ஒன்றின் விலை 366,300 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று   362,600 ஆக பதிவாகியிருந்தது. இதற்கிடையில்,   24 காரட் தங்கத்தின் விலை  396,000 ஆக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

தனுசுக்கு ஐஸ் வைக்கும் நடிகை!

  • February 21, 2026
  • 0 Comments

தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் தொடர்பில் கிசு கிசுக்கள் காட்டுத் தீ போல் பரவிவரும் நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல தகவல் வெளிவந்துள்ளது. “தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்.” என்று நடிகை மிருணாள் தாகூர் புகழாரம் சூட்டியிருக்கிறார். தனுஷ், மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் கரம்பிடிக்கவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே தகவல்கள் பகிரப்பட்டுவந்தன. இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் இந்த விவகாரம் தொடர்பில் […]

ஐரோப்பா

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க தீர்மானம்!

  • February 21, 2026
  • 0 Comments

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணைக்காக அவர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிபிசி ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் (Luke Pollard), ஆண்ட்ரூ  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னாராக மாறுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மன்னர் சார்ள்ஸின்  […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!

  • February 21, 2026
  • 0 Comments

தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.

error: Content is protected !!