இலங்கை செய்தி

வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

  • February 23, 2026
  • 0 Comments

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை வாக்காளர் விபரங்களைச் சேகரிப்பதற்காக கிராம சேவை உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருகை தரமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம் அல்லது தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் […]

ஐரோப்பா

மனித உரிமை மீறல் : 08 ரஷ்ய அதிகாரிகளுக்கு தடை விதிப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 08  நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் இன்று தடை விதித்துள்ளது. அலெக்ஸி கோரினோவ் (Aleksei Gorinov) மற்றும் பத்திரிகையாளர் மரியா பொனோமரென்கோ (Maria Ponomarenko) போன்ற அரசியல் கைதிகள் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தண்டனைக் காலனிகளின் தலைவர்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை அமுலுக்கு கொண்டுவர 27 ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் ஒருமித்த ஒப்புதல் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூவை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஆதரவு

  • February 23, 2026
  • 0 Comments

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew) அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்கப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது அரசாங்கம் ஆதரவு வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese ) தெரிவித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இளவரசர் உள்ளிட்ட பட்டங்கள் நீக்கப்பட்டபோதிலும், ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான […]

உலகம்

மெக்சிகோவில் தொடரும் வன்முறை : தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் ஜலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சர் ஒமர் கார்சியா ஹார்ஃபுச் (Omar Garcia Harfuch) இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். “எல் மென்சோ” மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கும்பல் தலைவராக இருந்தார். அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களை தருபவர்களுக்கு $15 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை – 10 பேர் கைது

  • February 23, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்னர். இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23.02) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை […]

உலகம்

ஈராக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீளப் பெற்றுக்கொள்ள துருக்கி இணக்கம்!

  • February 23, 2026
  • 0 Comments

சிரிய முகாம்களில் இருந்து ஈராக்கிற்கு மாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய அரசு கைதிகளை மீள பெற்றுக்கொள்ள துருக்கி முன்வந்துள்ளது. ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் (Fuad Hussein) இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஈராக் தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்புவது குறித்து மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். சிரிய அரசு  கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக சந்தேக நபர்களை அடைத்து வைத்திருந்த […]

உலகம் செய்தி

அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல் – 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

  • February 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் தாக்கம் காரணமாக 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிர்கால புயல் தாக்கம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட கரோலினாவிலிருந்து மெய்ன் (Maine) மாநிலம் வரை குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு கனடாவின் சில பகுதிகளிலும் எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதன்முறையாக நியூயோர்க் நகரத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன.

இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபை தொடர்பான முறைப்பாடு – காலவகாசம் நீடிப்பு

  • February 23, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால காலவகாசத்தை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. 201 0ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகையால் அரச சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வு

  • February 23, 2026
  • 0 Comments

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வடைந்துள்ளது. தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026 ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக, அம்மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, 18 முதல் […]

error: Content is protected !!