அரசியல் இலங்கை செய்தி

சமூக சக்தியென்பது வறுமை ஒழிப்பு ஆயுதம்: கிளிநொச்சியில் அமைச்சர் விளக்கம்!

  • February 25, 2026
  • 0 Comments

“சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (25.02.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு […]

ஐரோப்பா

அமைதி பேச்சுவார்த்தையில் சந்தேகம் : மக்ரோன் விமர்சனம்!

  • February 25, 2026
  • 0 Comments

அமெரிக்கவின் தலைமையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தெரிவித்துள்ளார். உக்ரேனிய, ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமற்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், புட்டின் அமைதி ஒப்பந்தத்திற்கு புறம்பாக செயற்படுவதையும் எடுத்துக்கூறியுள்ளார். கீவின் நட்பு நாடுகளின் மெய்நிகர் கூட்டத்தில் பேசிய மக்ரோன் இந்த கருத்துக்களை முன்வைத்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உக்ரைனுக்கு அதிகரித்த […]

ஐரோப்பா

ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த பிரித்தானியா!

  • February 25, 2026
  • 0 Comments

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடைகள் ரஷ்யாவின் முக்கியமான நிதி, இராணுவ உபகரணங்கள் மற்றும் வருவாய் ஓட்டங்களை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொண்டு செல்லும் டிரான்ஸ்நெஃப்ட்  (Transneft) மற்றும் ரஷ்யாவின் ‘நிழல் கடற்படையின்’ ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்ட 48 எண்ணெய் டேங்கர்கள் மீது […]

இந்தியா

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

  • February 25, 2026
  • 0 Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுR. Nallakannu  காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்தியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே கைது: பொலிஸார் கூறுவது என்ன?

  • February 25, 2026
  • 0 Comments

விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் E.U. Woodler மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார். “ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் […]

உலகம்

சீனாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் : ஈரானின் திட்டம் தான் என்ன?

  • February 25, 2026
  • 0 Comments

ஒரு பக்கம் அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் ஈரான் மறுபக்கம் சீனாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகிறது. சீனாவின் மேம்பட்ட CM-302 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்யும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூப்பர்சோனிக் ஏவுகணைகள் கப்பல் பாதுகாப்புகளைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளன, இது ஈரானின் தாக்குதல் திறன்களை கணிசமாக மேம்படுத்துகிறது மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான […]

வட அமெரிக்கா

பனிப்புயலால் 153 ஆண்டுகால நாளிதழ் வெளியீடு முதல் முறையாக நிறுத்தம்!

  • February 25, 2026
  • 0 Comments

வரலாறு காணாத பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ‘The Boston Globe Newspaper’, தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. Boston Globe அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் (Massachusetts) மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது. பனிப்புயலால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதால் நாளிதழ் வெளியீடுவது நிறுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான ‘The Boston Globe’, 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது […]

இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டைக் கொலை: 2ஆவது துப்பாக்கிதாரி சிக்கியது எப்படி?

  • February 25, 2026
  • 0 Comments

அக்குரேகொட இரட்டைக் கொலை Akuregoda double murder சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார். அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரு துப்பாக்கிதாரிகளே சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பின்சென்றனர். இது தொடர்பான விசாரணை வேட்டையில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிதாரியொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தடுப்பு காவலில் […]

பொழுதுபோக்கு

மலை உச்சியில் நாளை இணையும் இரு இதயங்கள்!

  • February 25, 2026
  • 0 Comments

நடிகர் விஜய்தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா Rashmika ஆகிய ஜோடியின் காதல் திருமணம் நாளை நடைபெறுகின்றது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனராம். திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் இடம்பெறவுள்ளதாம். மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்ற இடமாகும். திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா, […]

இலங்கை செய்தி

விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath இரு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளை (26) ஜேர்மன் செல்கின்றார். ஜேர்மன், ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் பிரெமன் அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. இதன்போத வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு விழா […]

error: Content is protected !!