ஐரோப்பா

UKவின் M6 மோட்டார் பாதை மூடப்பட்டுள்ளது : பயண தாமதங்கள் குறித்து எச்சரிக்கை!

  • January 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில் (Greater Manchester)  இரு திசைகளிலும் M6 மோட்டார் பாதை இன்று தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக  ஜங்ஷன் (Junction) 26  மற்றும் 23 இல்   கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் ஏறக்குறைய 01 மணித்தியாலம் தாமதத்தை எதிர்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட […]

உலகம் செய்தி

சீனா, கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பம் – குறைந்த வரி ஒப்பந்தம்

  • January 16, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் கனேடிய பிரதமர் மார்க் கார்னியும் பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் குறைந்த வரி விகிதங்களை அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் படி, மார்ச் முதலாம் திகதிக்குள் சீனா கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கனோலா (canola) எண்ணெய் மீதான வரியை 85% இலிருந்து 15% ஆகக் குறைக்கும். இதேவேளை, கனடா சீன மின்சார வாகனங்களுக்கு ‘மிகவும் சாதகமான நாடு’ விகிதமான 6.1% வரியை விதிக்க […]

ஐரோப்பா செய்தி

6 நாள் போராட்டத்திற்குப் பின் சீரானது குடிநீர் விநியோகம்:   நீர் நிறுவனம் மீது விசாரணை

  • January 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் ‘கோரெட்டி’ (Goretti) புயல் காரணமாக ஆறு நாட்களாக நீடித்த குடிநீர் விநியோகத் தடை, தற்போது பெரும்பாலான வீடுகளில் சீராகியுள்ளதாக சவுத் ஈஸ்ட் நீர் (SEW) நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் குழாய் உடைப்புகள் காரணமாக சுமார் 30,000 வாடிக்கையாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் குடிநீரின்றித் தவித்தனர். குறிப்பாக டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) பகுதியில் 6,500 வீடுகளுக்கு விநியோகம் சீராகியுள்ள போதிலும், சில இடங்களில் குறைந்த அழுத்தத்துடனேயே […]

உலகம்

டோக்கியோவில் ரயில் சேவைகள் பாதிப்பு – 673000 பயணிகள் தவிப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இன்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிய மின் தடை காரணமாக யமனோட்  (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin-Tohoku ) பாதைகளின் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய 673000  பயணிகள் ரயில் நிலையங்களில் சிக்கி தவித்ததாக அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக 20 முதல் 60 வயதுடைய 10 பேர் குமட்டல், மூச்சுத் திணறல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்ததாகவும், அவர்களில் 05 […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் சாபக்கேடான அரசியல் முன்னெடுப்பு: தமிழரசுக் கட்சிமீது அமைச்சர் பாய்ச்சல்!

  • January 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். ” முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் […]

RaveenaDaha #Pongal2026 #RaveenaDahaLatest #VillagePongal #HalfSaree #NatureLove #FarmerRespect #TamilActress புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

செங்கரும்பும்.. பசுமை வயலும்.. ரவீனாவின் நெகிழ்ச்சியான பொங்கல் ஆல்பம்!

  • January 16, 2026
  • 0 Comments

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான ரவீனா தாஹா, இந்த ஆண்டு பொங்கலை மிகவும் அழகாகவும், குறும்புத்தனம் நிறைந்தும் கொண்டாடியுள்ளார். அவர் புடவையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சின்னத்திரை நட்சத்திரம் ரவீனா தாஹா, இந்த ஆண்டு பொங்கலை மிகவும் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியுள்ளார். ஆடம்பரமான இடங்களைத் தவிர்த்து, இயற்கையான வயல்வெளியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரவீனா ஊதா நிற புடவை அணிந்து, ஒரு வயதான விவசாயியின் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிற்கு சீனா மூலம் அச்சுறுத்தல் : 90,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்

  • January 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தூய்மை எரிசக்தித் துறை சீனா மீது கொண்டுள்ள அதீத சார்பு காரணமாக, எதிர்காலத்தில் சுமார் 90,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக IPPR (The Institute For Public Policy Research) ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, மின்கல விநியோகத்தில் ஏற்படும் சிறு தடங்கல்கள் கூட 5 இலட்சத்து 80 ஆயிரம் வாகனங்களின் உற்பத்தியைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூய்மை எரிசக்தி இலக்குகள் எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு, பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் […]

இலங்கை செய்தி

நயினை அம்மனையும் வழிபட்ட ஜனாதிபதி!

  • January 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாக்களில் நேற்று ஜனாதிபதி பங்கேற்றதுடன், மக்களுடனும் சந்திப்புகளை நடத்தி இருந்தார். இன்று வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டார். நயினாதீவுக்குக் விமானத்தில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார். தையிட்டி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார் என தெரியவருகின்றது. அதன்பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு […]

இந்தியா செய்தி

ஈரானில் சிக்கியுள்ள 16 இந்திய மாலுமிகள்: பிரதமருக்குக் குடும்பத்தினர் அவசரக் கோரிக்கை

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானின் புரட்சிக் காவல் படையினரால் (IRGC) சிறைபிடிக்கப்பட்டுள்ள ‘வேலியன்ட் ரோர்’ (Valiant Roar) கப்பலில் உள்ள 16 இந்திய மாலுமிகளை விரைவாக மீட்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி இந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அதில் சல்பர் திரவமே இருந்ததாக மாலுமிகள் தரப்பு கூறுகிறது. தற்போது 10 மாலுமிகள் […]

error: Content is protected !!