வியாழன் கிரகத்திற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – பூமியைப் பாதுகாக்கும் காவலன்
சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன் (Jupiter), ஒரு புதிய ஆய்வில் விண்வெளிச் சூப்பர் ஹீரோ என்று கண்டறியப்பட்டுள்ளது. பூமியை உருவாக்கக் காரணமாக இருந்த வியாழன் பல வியக்கவைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளதாக, ரைஸ் பல்கலைக்கழக (Rice University) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானபோது வியாழன் கோள் மிக வேகமாகப் பெரிதானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழனின் பிரம்மாண்டமான ஈர்ப்பு விசை, உள்ச் சூரியக் குடும்பத்தை […]













