செய்தி தென் அமெரிக்கா

ஈக்வடாரில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழப்பு

  • September 25, 2025
  • 0 Comments

ஈக்வடாரில் இந்த வாரம் நடந்த இரண்டாவது கொடிய சிறைகலவரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பிய எல்லைக்கு அருகிலுள்ள கடலோர நகரமான எஸ்மரால்டாஸில் உள்ள சிறைச்சாலையில் கலவரம் நடைபெற்றுள்ளது. இந்த வார தொடக்கத்தில், தெற்கு ஈக்வடாரில் கும்பல் சண்டையால் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். குயாகுவிலுக்கு தெற்கே உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் உள்ள கைதிகள் அதிகாரிகளுடன் மோதினர், ஒரு காவலரைக் […]

செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி

  • September 25, 2025
  • 0 Comments

2025.ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்த் வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் 31 ஓட்டங்களும், முகமது நவாச் 25 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 136 […]

உலகம் செய்தி

அடுத்த மாதம் இந்தியா செல்லும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

  • September 25, 2025
  • 0 Comments

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பார் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வருகைக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் இரு தரப்பினரும் விஜயத்திற்கான திகதியை திட்டமிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மார்க் கார்னியுடன் சந்தித்ததைத் தொடர்ந்து ஒட்டாவாவிற்கும் புது தில்லிக்கும் இடையே பதற்றம் தணிந்த நிலையில் இந்த சந்திப்பு […]

ஆசியா செய்தி

ஆபாச காணொளி காரணமாக ஒரேநாளில் தாய்லாந்து அழகு ராணியின் பட்டம் பறிப்பு

  • September 25, 2025
  • 0 Comments

“பேபி” என்று அழைக்கப்படும் தாய்லாந்து அழகு ராணி சுஃபானி நொய்னோன்தோங், செப்டம்பர் 20 அன்று வென்ற தனது மிஸ் கிராண்ட் பிரச்சுவாப் கிரி கான் 2026 பட்டத்தை ஆபாச காணொளி காரணமாக இழந்துள்ளார். முடிசூட்டு விழாவின் அடுத்த நாள் சுஃபானி நொய்னோன்தோங்கின் பாலியல் பொருளை பயன்படுத்துவது மற்றும் மின்-சிகரெட்டைப் புகைப்பது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. தாய்லாந்தின் 76 மாகாணங்களின் போட்டியாளர்களுடன் தேசிய மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 போட்டியில் தனது மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுஃபானியின் […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரஸாவின் கழிப்பறைக்குள் இருந்து 40 சிறுமிகள் மீட்பு

  • September 25, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்படாத மதரஸா ஒன்றின் கழிப்பறையில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட நாற்பது சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயாக்பூர் தாலுகாவின் கீழ் பஹல்வாரா கிராமத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்திற்குள் சட்டவிரோத மதரஸா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது மொட்டை மாடியில் இருந்த கழிப்பறையில் சிறுமிகள் மீட்கப்பட்டனர். குறித்த சிறுமிகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அனைவரும் பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதரஸா பதிவுகள் […]

ஆசியா செய்தி

நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் இடையே சந்திப்பு

  • September 25, 2025
  • 0 Comments

நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) ஒரு பகுதியாக, பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டதாக தலைமை ஆலோசகரின் பத்திரிகை செயலாளர் ஷஃபிகுல் ஆலம் தெரிவித்துள்ளார். இது யூனுஸ் மற்றும் ஷெரீப்புக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு ஆகும். கடந்த ஆண்டு UNGA கூட்டத்தின் போது முதல் சந்திப்பு இடம்பெற்றது. […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

ஆர்வலர் சார்லி கிர்க்கின் புகைப்படத்துடன் அமெரிக்க நாணயத்தை வெளியிட வலியுறுத்தல்

  • September 25, 2025
  • 0 Comments

இந்த மாத தொடக்கத்தில் உட்டா பல்கலைக்கழகத்தில் ஒரு பொது நிகழ்வின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க்கின் படத்தை அமெரிக்க நாணயத்தில் வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் உதவியாளருமான கிர்க், சிறப்பு வெள்ளி டாலர் நாணயங்களில் இடம்பெறலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த ஆகஸ்ட் ப்ஃப்ளூகர் மற்றும் அரிசோனாவைச் சேர்ந்த அபே ஹமாதே ஆகிய இரண்டு குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கிர்க்கின் படத்தை […]

இந்தியா செய்தி

சொத்து தகராறில் 5 குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற ஜார்க்கண்ட் நபருக்கு மரண தண்டனை

  • September 25, 2025
  • 0 Comments

ஜார்க்கண்டின் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் நிலத் தகராறில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுன்னு மஞ்சி என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் ஐபிசி பிரிவு 302ன் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிலம் விற்கப்பட்டுள்ளது, குறித்த பணம் நான்கு சகோதரர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இருப்பினும், தனக்குக் குறைவான பணம் கிடைத்ததாக சுன்னு நம்பியுள்ளார். கோபத்தில், சுன்னு தனது சகோதரர் ரவி, அவரது […]

செய்தி வட அமெரிக்கா

இரண்டு இந்தியர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

  • September 25, 2025
  • 0 Comments

அமெரிக்கர்களுக்கு சட்டவிரோத மற்றும் போலி மருந்துகளை விற்பனை செய்யும் ஆன்லைன் மருந்தகங்களை நடத்தியதாக இரண்டு இந்தியர்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்காவில் ஃபென்டானில் மற்றும் மெத்தம்பேட்டமைன் நிரப்பப்பட்ட போலி மாத்திரைகளை விற்பனை செய்த 39 வயது அப்பாஸ் ஹபீப் சயீத், 34 வயது கிசார் முகமது இக்பால் ஷேக் மற்றும் இவர்களது கேஎஸ் இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் ஆன்லைன் மருந்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தளமாகக் கொண்ட இருவரும் டொமினிகன் குடியரசு மற்றும் அமெரிக்காவில் உள்ள கடத்தல்காரர்களுடன் […]

செய்தி விளையாட்டு

Asia Cup – வங்கதேசத்திற்கு 136 இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

  • September 25, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்கதேசத்தின் அதிரடி பந்துவீச்சால் 49 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. முகமது ஹாரிஸ் 23 பந்தில் 31 ஓட்டங்களும் ஷாஹீன் அப்ரிடி 19 ஓட்டங்களும் முகமது நவாஸ் 15 பந்தில் 25 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் […]

error: Content is protected !!