ஐரோப்பா

துருக்கியின் மத்திய பகுதியில் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடம் – இருவரை மீட்க போராடும் குழுவினர்!

  • January 25, 2025
  • 0 Comments

துருக்கியின் மத்திய பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மூவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரையும் மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். தலைநகர் அங்காராவிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்) தெற்கே உள்ள கோன்யா நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருபே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் […]

இலங்கை

இலங்கையில் உலர்ந்த திராட்சை வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒரு வாடிக்கையாளர் கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொட்டலத்தில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் காணொளி வைரலாகி வருகிறது. அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொட்டலத்தில் இருந்தே இறந்த பல்லி இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக உணவுகளை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் சுகாதாரமற்று செயற்படுவதையும், சில நிலையங்களில் குறிப்பிட சில உணவுகள் அதி கூடிய விலையில் விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

இலங்கைப் பெண் லாஸ்லியா நடித்துள்ள “மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்”.. படம் எப்படி இருக்கு?

  • January 25, 2025
  • 0 Comments

நேற்றைய தினம் குடும்பஸ்தன், வல்லான் உட்பட பல படங்கள் திரையரங்கில் வெளியானது. அதில் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் யூடியூபர் கூட்டணியில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியாகி இருக்கிறது. அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரிபாஸ்கர், ரயான், லாஸ்லியா நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது பாசிட்டி ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. கல்லூரியில் லாஸ்லியாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஹரிபாஸ்கர். ஆனால் அவரோ இந்த காதலை ரிஜெக்ட் செய்கிறார். இதனால் கடுப்பாகும் ஹீரோ லாஸ்லியாவிடம் வேறு பொண்ணை காதலித்து வெற்றி பெறுவேன் என […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,650 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு – ஏமாற்றும் கும்பல் – 132 பேர் கைது

  • January 25, 2025
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இவர்கள் பதிவாகியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் […]

செய்தி வாழ்வியல்

இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – வைட்டமின் டி குறைபாடாக இருக்கலாம்

  • January 25, 2025
  • 0 Comments

உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து என இவை அனைத்தும் உடலில் சீரான செயல்பாட்டிற்கு தேவை. வைட்மின்களில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட காலத்திற்கு நோய்களிலிருந்து விலகி இருக்க விரும்பினால், உணவில் வைட்டமின் டி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு கண்டிப்பாக இருக்கக்கூடாது. வைட்டமின் டி இன் மிகப்பெரிய ஆதாரம் சூரிய ஒளி ஆகும். எலும்புகள், தசைகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது

  • January 25, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பரவி வரும் புதிய காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் புதிய காட்டுத்தீ, ஆபத்தான பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை துரிதப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட ஹியூஸ் எனப்படும் புதிய காட்டுத் தீயால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. பலத்த காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்துவது கடினம் என்று தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தீ நிலைமையில் சுமார் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

  • January 25, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.66 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.50 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர்ந்தோரை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்து அது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதற்கும் அதிபர் டிரம்ப் கடுமையான- தெளிவான செய்தியை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!