ஐரோப்பா

இத்தாலி கடற்பகுதியில் தோன்றிய சூறை புயல் : குழந்தைகளை கட்டியணைத்தப்படி ஓடும் மக்கள்!

  • August 23, 2024
  • 0 Comments

இத்தாலியின் கடற்பகுதியில்  எழுந்த நீரோட்டம் பற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் இத்தாலியின் கடற்பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 22 பேருடன் பயணித்த படகு ஒன்று மூழ்கியது. இந்நிலையில் தற்போது படகு கவிழ்வதற்கு முன்பு கடற்பகுதியில் நிலவிய கடுமையான சூறை புயல் பற்றிய காணொலி வெளியாகியுள்ளது. இத்தாலியின் பொலிகாஸ்ட்ரோ, காம்பானியா பகுதியில் நிலத்தில் ஒரு பெரிய நீர்நிலை நகரும்போது மக்கள் பீதியில் அவ்விடத்தில் இருந்து ஓடுவதை காணொலி காட்டுகிறது.  

விளையாட்டு

15 வருடத்திற்கு பின் முதல் வீரர்.. பாகிஸ்தான் படைத்த சாதனை

  • August 23, 2024
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச பவுலர்கள், முதல் 8 ஓவருக்குள் 16 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர். தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபீக் 2 ரன்னிலும், கேப்டன் […]

ஐரோப்பா

ஆஸ்திரேலியர்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல புதிய அனுமதி அவசியம்

  • August 23, 2024
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஆஸ்திரேலியர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், இதுவரை ஐரோப்பா செல்ல விசா தேவைப்படாத ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 30 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல பயண அனுமதிப் பத்திரம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. ETIAS எனப்படும் புதிய பயண அங்கீகார அமைப்பு, ஐரோப்பிய பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பை நோக்கிய ஒரு படியாகும், இது அமெரிக்காவில் உள்ள அமெரிக்க […]

ஆசியா

தென் கொரியாவில் 09 மாடிகளை கொண்ட கட்டடத்தில் தீ விபத்து : 07 பேர் உயிரிழப்பு!

  • August 23, 2024
  • 0 Comments

தென் கொரியாவின் புச்சியோன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புச்சியோனின் பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் கிம் இன்-ஜே தெரிவித்துள்ளார். ஒன்பது மாடிகள் கொண்ட ஹோட்டலில் 23 விருந்தினர்கள் இருந்ததாக புச்சியோன் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி லீ சாங்-டான் தெரிவித்தார். தற்போது தீ முற்றாக […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியது – ஆறாக ஓடும் நெருப்புக் குழம்பு

  • August 23, 2024
  • 0 Comments

ஐஸ்லாந்தின் கிரிண்டாவிக் நகரின் அருகே எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனை தொடர்ந்து நெருப்புக் குழம்பு ஆறாக வெளியேறி ஓடுகிறது. கடந்த டிசம்பரில் அந்த எரிமலை வெடித்ததை அடுத்து தற்போது 6ஆவது முறையாக நெருப்பு குழம்பை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வானியல் மையம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகள் மீண்டும் மீண்டும் இதேபோல் வெடிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகம்

உலகின் மிகப் பெரிய சிலந்தி கண்டுப்பிடிப்பு : 07 எலிகளுக்கு சமம்!

  • August 23, 2024
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய சிலந்தி இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சிலந்தியானது பொதுவாக இரவில் வளரும் திறன் கொண்டது எனவும், பறவைகளை உட்கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கோலியாத் பேர்டீட்டர் என்று பொதுவாக அறியப்படும் தெரபோசா ப்ளாண்டி, 11 அங்குல நீளம் வரை வளரும் திறன் கொண்டது. அதன் எடை 170 கிராம் ஆகும். சாராசரியாக ஏழு எலிகளின் அளவை ஒத்ததாக இதன் நிறை காணப்படுகிறது. அதன் அளவு மற்றும் வலிமை இருந்தபோதிலும், சிலந்தியின் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என ஆய்வளார்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் வெளியிட்ட WhatsApp

  • August 23, 2024
  • 0 Comments

பிறமொழிகளில் அனுப்பப்படும் வாய்ஸ் நோட்ஸ்களை புரிந்து கொள்ளும் விதமாக புதிய அப்டேட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல அந்நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் மெட்டா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒரு செய்தியை டெலீட் (delete) செய்தால் அதை திரும்ப பெறும் (undo) வசதியை வாட்ஸ் […]

ஆசியா

வங்கதேசத்திற்கு வருகை தந்துள்ள ஐ.நா குழுவினர் : மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை!

  • August 23, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று வங்கதேசத்திற்கு வருகை தந்துள்ளது. ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முந்திய வன்முறை மற்றும் அமைதியின்மையின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குறித்த குழு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு ஆதரவை வழங்குவதற்காக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவரான ரோரி முங்கோவன் தலைமையிலான சிறிய குழு உறுதியளித்துள்ளது. இது உண்மையிலேயே […]

செய்தி வட அமெரிக்கா

குடிநீரில் 2 மடங்கு புளோரைடு – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

  • August 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல் இரண்டு மடங்கு fluoride இருந்தால் அது பிள்ளைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கக்கூடும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. Fluoride அதிகம் இருப்பதையும் பிள்ளைகளின் அறிவுத்திறனையும் தொடர்புபடுத்தி அமெரிக்க அரசாங்க அமைப்பு வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும். Fluoride பற்களை உறுதியாக்குகிறது, பற்களில் ஏற்படும் கறையை அகற்ற உதவுகிறது என்று அமெரிக்கத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறுகிறது. குடிநீரில் குறிப்பிட்ட அளவு Fluoride கலக்கப்படுவது சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய பொதுச் […]

உலகம்

இயேசு கிறிஸ்துவின் புனித உடலை மறைக்க பயன்படுத்திய துணியின் வரைபடைகளை உருவாக்கிய ஆய்வாளர்கள்!

  • August 23, 2024
  • 0 Comments

சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் இயேசு கிறிஸ்துவின் புனித உடலை மறைக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துணியை ஆய்வாளர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடிவமைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி, புனிதத் துணியில் உள்ள மங்கலான முத்திரைகளின் அடிப்படையில் உயர் தெளிவுத்திறன் கொண்ட படம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இப்போது அலைகளை உருவாக்கி வரும் புகைப்படங்கள் இயேசு கிறிஸ்து எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக அழுத்தமான காட்சிகளில் ஒன்றை வழங்குகின்றன. துரின் கவசம், ஒரு மனிதனின் மங்கலான உருவத்தைத் தாங்கிய […]

error: Content is protected !!