புதிய பிரதமர் தேர்வு குறித்து கட்சித் தலைவர்களுடன் மக்ரோன் பேச்சுவார்த்தை
பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து ஏறக்குறைய ஏழு வாரங்களுக்கு மேல் நீடித்த முட்டுக்கட்டைக்கு முடிவு வந்துள்ளது. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க அதிபர் இம்மானுவல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) இடதுசாதி, வலதுசாரி, மிதவாதக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். மக்ரோன் முன்மொழிபவர் யாராக இருந்தாலும் அவரது பணி கடினமானதாகவே இருக்கும். பிரான்ஸ் அரசாங்கம் அதன் நிதிப் பற்றாக்குறையைத் தணிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையமும் பத்திரச் சந்தையும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், 2025 வரவுசெலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவது […]













