ஆசியா செய்தி

சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை

  • August 24, 2024
  • 0 Comments

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த Indigo விமானத்தில் குழந்தை ஒன்று பிறசவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட டீப்தி சரசு வீரா வெங்கட்ராமனுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமானத்தில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், பெண் மருத்துவர், பெண் பயணிகள் சிலர் சேர்ந்து பிரசவத்திற்கு உதவினர். விமானி சென்னை விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு விவரம் அளித்திருந்தார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும், மருத்துவக் குழு டீப்திக்கு உதவத் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தாயும் குழந்தையும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் விமானம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு

  • August 24, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஓர்லி சர்வதேச விமானம் ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இரவு 8 மணி அளவில் குறித்த விமான நிலையத்துக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்தே ஓர்லியில் இருந்து Montpellier நகர் நோக்கி பறக்க இருந்த உள்ளூர் விமானம் ஒன்றே நிறுத்தப்பட்டது. பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானம் சோதனையிடப்பட்டது. இந்த நடவடிக்கை மூன்றுமணிநேரம் நீடித்ததால் அதன் பின்னர் விமானம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா? வெளியான தகவல்

  • August 24, 2024
  • 0 Comments

இலங்கையில் புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அதனை தெரிவித்தார். மேலும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று […]

இலங்கை செய்தி

இலங்கை- பாடசாலைகளில் AI தொடர்பான மாணவர் சங்கங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • August 23, 2024
  • 0 Comments

100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டமாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தரம் 6 முதல் 9 வரையான மாணவர்களின் பங்களிப்புடன் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதன்படி, இத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் ஏனைய பாடசாலைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் […]

உலகம் செய்தி

எரித்திரியாவின் முன்னாள் அமைச்சர் சிறையில் உயிரிழப்பு

  • August 23, 2024
  • 0 Comments

எரித்திரியாவின் முன்னாள் நிதியமைச்சரும், அந்நாட்டு அதிபரை கடுமையாக விமர்சித்தவருமான பெர்ஹான் ஆப்ரேஹ் சிறையில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 79 வயதான அவர் எரித்திரியாவின் நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர், ஆனால் அவர் 2012 இல் ஜனாதிபதி ஐசயாஸ் அஃப்வெர்கியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்ட பிறகு சிறையில் அடைக்கப்பட்டார், அதில் அவர் ஜனாதிபதியை ஒரு “சர்வாதிகாரி” என்று வர்ணித்தார். காவலில் உள்ள மூத்த […]

செய்தி வட அமெரிக்கா

அடுத்த வாரம் சீனா செல்லும் ஜோ பைடனின் ஆலோசகர் ஜேக் சல்லிவன்

  • August 23, 2024
  • 0 Comments

அமெரிக்கத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பதட்டங்களைச் சமாளிப்பதற்கான புதிய முயற்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்க சீனாவுக்குச் செல்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சல்லிவன் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை பெய்ஜிங்கிற்குச் செல்கிறார், இது 2016க்குப் பிறகு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் முதல் வருகையைக் குறிக்கும். இருந்தபோதிலும், வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளிங்கன் உட்பட மற்ற மூத்த அமெரிக்க அதிகாரிகள் கடந்த இரண்டு […]

செய்தி விளையாட்டு

SLvsENG Test – வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

  • August 23, 2024
  • 0 Comments

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில், இலங்கைக்கு எதிரான வெற்றியை நோக்கி இங்கிலாந்து நகர்கிறது. இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் தொடங்கிய இன்றைய நாளின் முடிவில் இலங்கை அணி 204-6 ரன்களுடன் 3ம் நாளை முடித்தனர். இன்றைய நாள் ஆரம்பிக்கும் போது இங்கிலாந்து அணி 259 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்கள் முன்னிலையில் […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் விமான விபத்து – 9 பேர் உயிரிழப்பு

  • August 23, 2024
  • 0 Comments

தாய்லாந்து தலைநகர் பெங்கொக் அருகே சதுப்பு நிலப்பகுதியில் சிறு ரகபயணிகள் விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில், அதில் பயணத்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர். பெங்கொக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து டிராட் மாகாணத்துக்கு பயணித்த “தாய்” விமான சேவை என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள், 2 விமானிகள் உட்பட தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய சிறையில் ஊழியர்களை பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்ட கைதிகள்

  • August 23, 2024
  • 0 Comments

ஜூன் மாதம் முதல் நடந்த இரண்டாவது நிகழ்வில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் உள்ள சிறைக் காலனியில் ரஷ்ய கைதிகள் ஊழியர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணயக் கைதிகளாக சிறை ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலையின் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பெடரல் சிறைச்சாலை சேவை மேலும் தெரிவித்துள்ளது. “பணயக்கைதிகளை விடுவிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் […]

செய்தி விளையாட்டு

கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

  • August 23, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நேற்று முன்தினம் கே. எல். ராகுல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார். அவரின் அறிவிப்புக்காக காந்திருந்த இரசிகர்கள்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு பதிவு வெளியானது. அதாவது கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா […]

error: Content is protected !!