ஐரோப்பா

பிரித்தானியா : தொழிற்கட்சியின் வரவு செலவு திட்டம் வலி நிறைந்ததாக இருக்கும்!

  • August 27, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சியை கைப்பறியுள்ள நிலையில் முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர், பொது தொழிலாளர் கட்சியின் முதல் பட்ஜெட் “வலி நிறைந்ததாக” இருக்கும் என்று எச்சரித்துள்ளார். புதிய பிரதமர் தனது அரசாங்கம் 22 பில்லியன் பவுண்டுகள் கருந்துளையுடன் போராடும் போது “நாம் நினைத்ததை விட மோசமான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஒரு சில வாரங்களில் பணக்காரர்களுக்கு வரி உயரும் சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டிய […]

உலகம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – சீன உயரதிகாரிகள் பெய்ஜிங்கில் சந்திப்பு

  • August 27, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீன உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச பெய்ஜிங் சென்றுள்ளார். நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 29ஆம் திதி வரை நடைபெறும் சந்திப்புகளில் சல்லிவனுடன் சீனாவின் உயர் அரசதந்திரி வாங் யி உள்ளிட்டோர் கலந்துபேசுவர். மத்திய கிழக்கு, உக்ரேன் நிலவரங்கள், தைவான், தென்சீனக் கடல் தொடர்பில் […]

ஆசியா

ஆசியாவிற்கு சுற்றுபயணத்தை மேற்கொள்ளும் பிரான்சிஸ்!

  • August 27, 2024
  • 0 Comments

போப் பிரான்சிஸ் அடுத்த வாரம் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர்   இந்தோனேசியாவின் சின்னமான இஸ்திக்லால் மசூதிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்,   நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு சமயக் கூட்டத்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய பயண அட்டவணையின்படி, செப்டம்பர் மூன்றாம் திகதி  ஜகார்த்தாவில் பயணத்தை துவங்கும் அவர், அங்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்திக்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் […]

வட அமெரிக்கா

கொரோனா தகவல்களை சென்சார் செய்ய வெள்ளை மாளிகை அதிகாரிகள் அழுத்தம்: மார்க் ஸூகர்பெர்க்

  • August 27, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவன சமூக வலைதளங்களில் கொரோனா தொடர்பான கன்டென்ட் அடங்கிய பதிவுகளை சென்சார் செய்ய சொல்லி பைடன் – ஹாரிஸ் நிர்வாகம் தங்கள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்ததாக மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனை குடியரசுக் கட்சியின் நீதிக் குழுவிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். “மெட்டா போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன […]

ஐரோப்பா

ஆஸ்திரியாவில் நோயாளியின் மண்டையோட்டில் துளையிட்ட 13 வயது சிறுமி!

  • August 27, 2024
  • 0 Comments

ஒரு ஆஸ்திரிய அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தனது 13 வயது மகளை அனுமதித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தென்கிழக்கு ஆஸ்திரியாவின் ஸ்டைரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில்  மருத்துவர் அவரது 13 வயது மகளை அறுவை சிகிச்சையில் […]

ஆசியா

ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை பார்த்து இரசித்த வடகொரிய தலைவர்!

  • August 27, 2024
  • 0 Comments

தற்கொலை ஆளில்லா விமானங்கள்” என்று அழைக்கப்படும் வெடிப்பைக் கண்ட வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உற்சாகமாக சிரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வட கொரியாவின் ட்ரோன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஃபென்ஸ் சயின்சஸ் அகாடமிக்கு அவர் விஜயம் செய்தபோது, ​​ இந்த ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆளில்லா விமானங்கள் வெவ்வேறு முன் அமைக்கப்பட்ட வழிகளில் பறந்த பின்னர் போலி இலக்குகளை வெற்றிகரமாக அடையாளம் கண்டு தாக்கியதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரிய […]

இலங்கை

கச்சத்தீவு கடற்பகுதியில் இரு இந்திய மீனவர்கள் மாயம்!

  • August 27, 2024
  • 0 Comments

கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்திய மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நான்கு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அங்கு அந்த படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். காணாமல் போன இந்திய மீனவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் துரத்திவிடப்பட்டாரா பிஜிலி ரமேஷ்?

  • August 27, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக கலந்துகொண்டவர்களில் பிஜிலி ரமேஷும் ஒருவர். இவர் அந்த சீசனில் சில எபிசோடுகளுக்கு பின்னர் பாதியில் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கான காரணமும் அந்த நேரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவர் குடித்துவிட்டு செட்டுக்கு வந்ததால் தான் அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி பிஜிலி ரமேஷிடமே ஒரு பேட்டியில் ஓப்பனாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆரம்பத்தில் நான் குடித்தேன், அதன்பின்னர் குடியை நிறுத்திவிட்டேன் […]

வட அமெரிக்கா

உக்ரேன் போர், பங்ளாதேஷ் நிலவரம் குறித்து மோடி-பைடன் கலந்துரையாடல்

  • August 27, 2024
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆகஸ்ட் 26ஆம் திகதியன்று ரஷ்யா-உக்ரேன் போர், பங்ளாதேஷ் அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து கலந்துரையாடினர்.இவை குறித்து அதிபர் பைடனுடன் தொலைபேசி மூலம் பேசியதாக மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். உக்ரேனில் அமைதிநிலை, நிலைத்தன்மை மீண்டும் திரும்புதற்கு இந்தியா முழு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறது எனப் பிரதமர் மோடி மறுஉறுதி செய்தார்.அத்துடன், பங்ளாதேஷ் மக்களின் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்குள்ள சிறுபான்மை இனத்தவர்கள், […]

பொழுதுபோக்கு

மனைவி குறித்து முதன்முறையாக சிவகார்த்திகேயன் கூறிய செய்தி

  • August 27, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார் அவர், ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த நிலையில் வெகு சீக்கிரமே கதையின் நாயகனாக மாறினார். ஜாலியான பல திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாகவே முற்றிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். தற்பொழுது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் “அமரன்” என்கின்ற திரைப்படத்திற்காக தன்னையே அவர் செதுக்கி இருக்கிறார் என்றே கூறலாம். இப்போது 39 வயது நிரம்பிய […]

error: Content is protected !!