உச்சம் தொட்ட வீட்டு வாடகை ;அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளது.அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருவதைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதால் வீட்டு வாடகைகள் புதிய உச்சத்தைத் தொடுகின்றன.2025ஆம் ஆண்டு 270,000 அனைத்துலக மாணவர்களுக்கு மட்டும் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 காலகட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. உள்ளூர் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. அது 2023ஆம் ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டு […]













