இலங்கை செய்தி

இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

  • June 24, 2024
  • 0 Comments

இலங்கையில் 2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களில் வெளியாகுமென பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. எனினும் தாம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.  

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • June 24, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டுக் கடன் காரணமாக ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் கடும் நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் கடனை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய புரிதல் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடனை செலுத்துவதில் உள்ள சிரமங்களை உரிய நிதி நிறுவனங்களுக்கு தெரிவித்து அதற்கான உதவிகளை பெற்றுக் கொள்ள பலர் தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கடனை அடைப்பதில் சிரமம் உள்ள வாங்குபவர்களுக்கு […]

இலங்கை

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

  • June 24, 2024
  • 0 Comments

அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் முதல் சிலாபம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். சிலாபத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இங்கிலாந்து அணி!

  • June 24, 2024
  • 0 Comments

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து அமெரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் புதிய வசதி

  • June 24, 2024
  • 0 Comments

X தள உரிமையானரான எலான் மஸ்க் கடந்த வாரங்களில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்தார். ‘பிரைவேட் லைக்ஸ்’ அம்சம் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக பிரத்யேக லைவ் ஸ்ட்ரீங் அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு வழங்கப்படுவதாக கூறியுள்ளது. எனினும் இந்த அம்சம் எப்போது அறிமுகம் செய்யயப்படும் எனக் கூறவில்லை. மற்ற சமூக ஊடக தளம் போல் அல்லாமல் பேஸ்புக், […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோதும் அபாயம் – பேரிடர் குறித்து நாசா எச்சரிக்கை

  • June 24, 2024
  • 0 Comments

பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் ஒன்று மோதும் சாத்தியக்கூறு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு 72 சதவீதம் சாத்தியம் உள்ளதென அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமி மீது அந்தக் குறுங்கோள் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட ஆய்வில், அந்த குறுங்கோளின் அளவு, அதன் தன்மை, குறுங்கோளில் உள்ள பொருள்கள், பயணப்படும் பாதை உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை […]

இலங்கை செய்தி

இலங்கையில் கல்விச் செயற்பாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

  • June 24, 2024
  • 0 Comments

இலங்கையில் முழு கல்விச் செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை விட தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவருக்கு தொழில் சந்தையில் அதிக தேவை உள்ளது. ஏனெனில் அரச பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இண்டஸ்ட்ரி எக்ஸ்போ – 2024 சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் […]

செய்தி வட அமெரிக்கா

சமூக ஊடகங்களால் பாதிப்பு – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

  • June 24, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் தற்போது செயல்படும் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை முத்திரை எழுதப்பட வேண்டும் என்று அந்நாட்டின் பொது சுகாதார சேவை ஆணையத்தின் தலைவர் விவேக் மூர்த்தி அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகங்களால் நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளை கருத்திற்கொண்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் காங்கிரஸிடம் கூறினார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் பரவும் வைரஸ் நோய்களின் தாக்கம் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • June 24, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறு பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் வைத்தியர் கல்லூரியின் செயலாளர் வைத்தியர் சன்ன டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுகின்றது. அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவிக்கின்றார். இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், […]

செய்தி வட அமெரிக்கா

பாலஸ்தீன குழந்தையை நீரில் மூழ்கடிக்க முயன்ற டெக்சாஸ் பெண்

  • June 23, 2024
  • 0 Comments

டெக்சாஸைச் சேர்ந்த பெண் ஒருவர், மூன்று வயது பாலஸ்தீனச் சிறுமியை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மே 19 அன்று டெக்சாஸின் யூலெஸ்ஸில் நடந்த இந்தச் சம்பவம், சிவில் உரிமைக் குழுக்களால் இனரீதியான தூண்டுதலால் விவரிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட, 42 வயதான எலிசபெத் வுல்ஃப், அவரது குடும்பத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுமியைத் கொலை செய்ய முயன்றுள்ளார் எலிசபெத் வுல்ஃப் தனது பாலஸ்தீனிய தாயுடன் […]

error: Content is protected !!