இலங்கை செய்தி

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்

  • June 26, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு . பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் […]

இந்தியா

உயர்தர தொலைத்தொடர்பு சேவைகளுக்காக 6857 கோடி செலவிடும் பார்தி ஏர்டெல்

  • June 26, 2024
  • 0 Comments

சந்தாதாரர்களால் இந்தியாவின் நம்பர்.2 தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பார்தி ஏர்டெல், உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையில் அரசு ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை வாங்க ₹ 6,857 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு காலாவதியாகும் 97 மெகாஹெர்ட்ஸ் (MHz) அலைக்கற்றை வாங்கியதாகவும், மேலும் மிட்-பேண்ட் ஹோல்டிங்கை அதிகரிக்க கூடுதல் அலைக்கற்றை வாங்கியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் நாட்டின் மிகப்பெரிய மிட்-பேண்ட் பூலைக் கொண்டுள்ளது, இது பொதுவாக 5G இணைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் முன்னணியில் இருக்கும் […]

இலங்கை செய்தி

மஹேல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

  • June 26, 2024
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தன 2021 இல் இலங்கை தேசிய அணியின் பயிற்சி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை செய்தி

அனுராதபுரம் சிறையில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த கைதி உள்ளிட்ட இருவர் தப்பியோட்டம்

  • June 26, 2024
  • 0 Comments

அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று (25) தப்பிச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் இருந்த பலகலைச் சேர்ந்த பெண்ணொருவரும் தப்பிச் சென்றுள்ளனர். கைதிகள் இருவரையும் மல்வத்து ஓயாவிற்கு அருகில் பயிர்ச் செய்கைக்காக அனுப்பிய போது திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை செய்தி

மீண்டும் ஜனாதிபதியின் தீர்மானத்தை நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை

  • June 26, 2024
  • 0 Comments

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது. அரசியலமைப்பு சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. சட்டமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிப்பதற்காக […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • June 26, 2024
  • 0 Comments

தனியார் நிறுவனமொன்றின் மேல் மாடியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இன்று (26) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேல் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்களும் ஆபத்தான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முலத்தீவு, 10ஆம் லேன், புதுக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை! கொழும்பில் ஒலித்த வாணவேடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு தனது உரையை சற்று முன்னர் ஆரம்பித்த போது கொழும்பில் வாணவேடிக்கைகள் ஒலித்தன. தேர்தல்களை முன்னிட்டு இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இந்த உரையை ஆற்றியுள்ளார். கைச்சாத்திடப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் படி இலங்கை 2028ஆம் ஆண்டு வரை கடனைத் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று ஆற்றிய விசேட உரையின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 2048ஆம் […]

விளையாட்டு

ICC T20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த டிராவிஸ் ஹெட்

  • June 26, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை முதல் இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை (842 புள்ளி) பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (844 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதையடுத்து 3வது இடத்தில் பில் சால்ட் (816 புள்ளி), 4வது இடத்தில் பாபர் அசாம் (755 புள்ளி), 5வது இடத்தில் முகமது […]

இலங்கை

200 கிலோகிராம் போதைப்பொருள் – 6 சந்தேகநபர்கள் கைது

இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் கடலில் உள்ள கப்பலொன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று இடம்பெறுள்ளது. கைப்பற்றப்பட்ட படகில் 200 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதில் ஐஸ் போதைப்பொருள் 120 கிலோகிராமும், ஹெரோயின் 80 கிலோகிராம் ஆகும். குறித்த போதைப்பொருட்களுடன் மீட்கப்பட்ட கப்பல் இன்று (26) காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிட்டதக்கது.

பொழுதுபோக்கு

புடவைக்கு குட் பை சொன்ன ரச்சிதா… குட்டையான ஆடையில் கவர்ச்சி போஸ்

  • June 26, 2024
  • 0 Comments

நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று வந்த பிறகு சீரியல் எதிலும் கமிட் ஆகவில்லை. படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். Fire என்ற படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சியும் வெளியாகி சில மாதங்களுக்கு முன் வைரல் ஆனது. தற்போது ரச்சிதா மஹாலக்ஷ்மி ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். இதுவரை புடவையில் அழகான குடும்ப குத்துவிளக்காக […]

error: Content is protected !!