பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்
பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது.பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது. சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர். […]













