ஐரோப்பா

பிரித்தானிய பொதுத் தேர்தல் – கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்

  • May 30, 2024
  • 0 Comments

பிரித்தானிய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலை முன்னிட்டு கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதில் 14 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்த்தரப்பான தொழிலாளர் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 650 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது. அதை முன்னிட்டு 5 வாரப் பிரசாரம் அதிகாரபூர்வமாகப் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் […]

வாழ்வியல்

தலையணை பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?

  • May 30, 2024
  • 0 Comments

இன்றைய பிஸியான வாழ்க்கையில் பலரும் தூங்க மட்டுமே வீட்டிற்கு வரும் சூழல் உள்ளது. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் நல்ல தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு நபர் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் முழுவதும் நன்றாக இருக்காது. நாள் முழுவதும் எரிச்சலுடன் எந்த வித வேலையும் ஓடாது. இது தவிர சரியான தூக்கம் இல்லை என்றால் நோய் வாய்ப்படவும் வாய்ப்புள்ளது. நம்மில் நிறைய பேர் தூங்கும் போது தலையணையை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – 42 லட்சம் கோழிகளை கொல்ல உத்தரவு

  • May 30, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது. டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து 42 லட்சம் கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர். மின்னசோட்டா மாகாணம் மின்னேபோலிஸ்ஸுக்கு வடக்கே உள்ள கோழிப் பண்ணையில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டதில் ஏற்கனவே 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன. […]

பொழுதுபோக்கு

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் மீண்டும் அதிரடி கைது

  • May 30, 2024
  • 0 Comments

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திந்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் டி.டி.எப்.வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 45 […]

விளையாட்டு

T20 Worldcup – அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் – பிரையன் லாரா கணிப்பு

  • May 30, 2024
  • 0 Comments

இன்னும் சில தினங்களில் டி20 உலக்கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் பிரையன் லாரா, இந்த நான்கு அணிகள் கட்டாயம் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 2ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து மோதவுள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதிபோட்டி 29ம் தேதியிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வத்தை இழந்த மக்கள்

  • May 30, 2024
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதன் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை இழந்து வருவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தவர்களும் தற்போது பயன்படுத்துவதில்லை என்றும், ChatGPT, Copilot மற்றும் ஜெமினி போன்ற AI கருவிகளை தற்போது ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள ரைட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் […]

இலங்கை செய்தி

கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரணங்கள் தொடர்பில் புதிய சட்டம்

  • May 30, 2024
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குள் உள்ள தனியார் காணிகளில் உள்ள மரங்களுக்கு குறித்த காணி உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சட்ட அறிவித்தல் ஒன்றை வெளியிட கொழும்பு மாநகர சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன், அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் அபாயகரமான மரங்களுக்கு அந்தந்த அலுவலகங்களின் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டுமென கொழும்பு மாநகர சபை கூறுகிறது. அதிக காற்று மற்றும் மழை காரணமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அண்மையில் 60 பாரிய மரங்கள் […]

செய்தி

பிரித்தானிய உள்துறை அமைச்சின் தவறால் உயிரிழந்த ஈழத்தமிழ் இளைஞன் – தவிக்கும் குடும்பத்தினர்

  • May 30, 2024
  • 0 Comments

இலங்கையர் ஒருவர் தனது தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தனிய உள்துறை அமைச்சின் தவறான செயற்பாடு காரணமாக சுதர்சன் இதயச்சந்திரன் என அடையாளம் காணப்பட்ட தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் உயிரிழந்துள்ளார். அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 41 வயதான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

  • May 30, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் மார்ச் மாதம் வரை கல்வி கற்க வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 741,224 என கல்வித் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, அதிக சர்வதேச மாணவர்களைக் கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பெயரிடப்பட்டுள்ளது. 281,784 சர்வதேச மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விக்டோரியாவில் 223,784 மாணவர்களுடன் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலம் 104,016 சர்வதேச மாணவர்களுடன் மூன்றாவது இடத்தையும், தெற்கு ஆஸ்திரேலியா 42,132 சர்வதேச மாணவர்களுடன் […]

இலங்கை

இலங்கையில் 20 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்?

  • May 30, 2024
  • 0 Comments

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தனுஷ்க பராக்கிரமசிங்க இதனை அறிவித்தார். இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு இந்த வாரத்தில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் […]

error: Content is protected !!