இலங்கை

மக்கள் எதிர்பார்ப்புக்கு நிகரான ஆட்சியை அமைக்கப்போவதாக அனுர உறுதி!

  • March 24, 2024
  • 0 Comments

எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிகரான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்ரோவில் நேற்று (23.03) நாட்டிலுள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்கிறார் பசில். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்று ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம்.  இன்று நாடாளுமன்றம் […]

இலங்கை

10 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

மேல், வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

கிரேக்கத்தில் வலி நிவாரண மருந்துகளுடன் கைப்பற்றப்பட்ட கப்பல்!

  • March 24, 2024
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றை பறிமுதல் செய்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று டன்களுக்கும் அதிகமான நரம்பு வலிக்கான மருந்தான ப்ரீகாபலின் மருந்தை கைப்பற்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏதென்ஸுக்கு தென்கிழக்கே 70 கிலோமீட்டர் (43 மைல்) தொலைவில் உள்ள லாவ்ரியோ துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது மேற்படி மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காப்ஸ்யூல்கள் கிட்டத்தட்ட 3.15 டன் எடையுள்ள 500 அட்டைப் பெட்டிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நீரிழிவு மற்றும் சிங்கிள்ஸ் போன்ற பல்வேறு நிலைகளால் […]

ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் : துக்க தினம் அனுஷ்டிப்பு!

  • March 24, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று (24.03)  துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்யா முழுவதும் உள்ள தூதரங்களின் முன்பு தாக்குதலில் உயிர் நீத்தவர்ளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ரஷ்யாவின் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 133 பேர் உயிரிழந்தனர். தாக்குதலின் போது தியேட்டருக்குள் 6,200 பேர் இருந்தனர். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யாவில் பதிவாகிய மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும், […]

பொழுதுபோக்கு

38 வருடம் ஓடிப்போச்சி… இளையராஜா – வைரமுத்து பிரிவின் பின்னணி என்ன தெரியுமா?

  • March 24, 2024
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து 37 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது ஏன் என்பது குறித்து பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.. வைரமுத்துவை இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அவரது இயக்கத்தில் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. அப்படத்தின் கம்போசிங் போது மெட்டுக்கு பாட்டு எழுதுவீர்களா என இளையராஜா கேட்க, முயற்சி செய்கிறேன் என சொல்லிவிட்டு, பாடல் வரிகளை […]

இலங்கை

ஆபத்தான நிலையில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை – ஷெஹான் சேமசிங்க!

  • March 24, 2024
  • 0 Comments

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (23.03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர், தொலைநோக்குப் பார்வை உள்ளவர் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து […]

இலங்கை

மைத்திரியிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினர்…

  • March 24, 2024
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டியில் கடந்த (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான உண்மை தனக்கு தெரியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!

  • March 24, 2024
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கம்

  • March 24, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது தான் அதற்குக் காரணமாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா […]

இலங்கை

யாழில் கேரள கஞ்சாவுடன் இரு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் கைது!

  • March 24, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

error: Content is protected !!