இலங்கை

விபத்தில் உயிரிழந்த பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

  • March 30, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று (30.03.2024) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் தஞ்சயன் மற்றும் வைத்தியர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கம், […]

இலங்கை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து மூவரை அதிரடியாக நீக்கிய மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சிக்குள் இருந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான தீர்மானம் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் போதே அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண […]

இலங்கை

உக்ரைன் – ரஷ்யா போரில் இலங்கை பிரஜை ஒருவர் பலி!

  • March 30, 2024
  • 0 Comments

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக போராடும் இலங்கையர்களில் 27 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுனா சில்வா என அழைக்கப்படும் இலங்கைப் பிரஜை, ரஷ்ய பதுங்கு குழியில் நடத்தப்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த நிபுன சில்வாவை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற மற்றொரு இலங்கையரான சேனக பண்டாரவும் இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான் நிபுனாவை அழைத்துச் செல்லும் போது, கடைசி பதுங்கு குழிக்கு அருகில் […]

இலங்கை

இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலே வரவேண்டும் – வியாழேந்திரன் கருத்து!

  • March 30, 2024
  • 0 Comments

இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய ஜனாதிபதியே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று (30.03)  மட்டக்களப்பில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு கருத்து […]

இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான எழுது கருவி பொருட்களைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் […]

உலகம்

எகிப்துக்கான கடனை 08 பில்லியனாக உயர்த்தும் IMF!

  • March 30, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, எகிப்துடன் அதன் பிணை எடுப்பு கடனை $3 பில்லியனில் இருந்து $8 பில்லியனாக உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் உயர்ந்து வரும் அரேபிய நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதாகும். இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எகிப்து உடனடியாக சுமார் 820 மில்லியன் டாலர்களைப் பெறுவதற்கு அதன் முடிவு உதவும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து ஏற்கனவே வட்டி […]

ஆசியா

காஸாவில் உதவி விநியோகத்தின் போது ஐவர் பலி

காஸாவில் உதவி விநியோகத்தின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதேசத்தின் வடக்கே உள்ள காசா நகரின் குவைத் ரவுண்டானாவில் வழங்கப்படவிருந்த சுமார் 15 டிரக்குகள் மாவு மற்றும் பிற உணவுகள் வருவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய பின்னர் இது நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனியர்களில் பாதி பேர் “பேரழிவு” பட்டினியை அனுபவித்து வருவதாக ஐ.நா ஆதரவு அறிக்கை எச்சரித்தது,

இலங்கை

ராகம வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் உயிரிழப்பு!

  • March 30, 2024
  • 0 Comments

ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார். கோ-அமோக்ஸிக்லாவ் என்ற தடுப்பூசியை செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் […]

இலங்கை

மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்திர உற்சவத்தில் கடந்த வியாழக்கிழக்கிமை அம்பாளுக்கு கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. தினமும் சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அம்பாளுக்கு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்றன. பூஜையினை தொடர்ந்து அம்பாளும் பஞ்சபாண்டவர்களும் புடை சூழ மட்டக்களப்பு வாவியில் மஞ்சல்குளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன : ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் பிரபா கருத்து!

  • March 30, 2024
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன. ஈரோஸக்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார். கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுனர் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுவருவதன் காரணமாக அவருக்கு எதிராக ஜனாதிபதி […]

error: Content is protected !!