உலகம்

அர்ஜென்டினா தலைநகரை ஆக்கிரமித்துள்ள நுளம்புகள் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • February 27, 2024
  • 0 Comments

அர்ஜென்டினா தலைநகர் போனஸ் அயர்ஸை நுளம்புகள் ஆக்கிரமித்துள்ளதனால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். எங்கும் சூழ்ந்திருக்கும் நுளம்புகளை காணொளி எடுத்துச் சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்துள்ளனர். கனத்த மழையால் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. பருவநிலை, சுற்றுச்சூழலைப் பொருத்து 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதுபோன்று நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அந்தக் நுளம்புகள் 20 நாள் வரை உயிர்வாழக்கூடியவை. அதனால் அந்தச் சூழல் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். குறித்த நுளம்புகளால் டெங்கு போன்ற […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் சிறப்புத் தள்ளுபடி என கூறி நடக்கும் மோசடி

  • February 27, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விஷேட சலுகைகள் வழங்குகிறோம் என்ற போர்வையில் தற்போதுள்ள விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிறப்புத் தள்ளுபடி என வாடிக்கையாளர்களை நம்பவைத்து முந்தைய விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகள் குழு CHOICE கூறுகிறது, இது சூப்பர் மார்க்கெட்டுகள் பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்றாகும். நிறுவனம் இது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அதில் Coles […]

வாழ்வியல்

கொரோனாவில் தப்பித்தவர்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!

  • February 27, 2024
  • 0 Comments

கொரோனாவில் உயிர் தப்பிய நபர்களுக்கு, நுரையீரல் பிரச்சனை ஏற்படுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2019ல் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. உலகம் முழுவதும் இந்த நோயின் தீவிரம் காரணமாக பொது முடக்கம் கொண்டுவரப்பட்டு, குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டிருந்தாலும் பல பக்கவிளைவுகளை சந்தித்து வருவதாக உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. […]

இலங்கை

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு – மர்ம நபர்களால் அதிர்ச்சி

  • February 27, 2024
  • 0 Comments

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அண்மையில் பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரும் இணைந்து இடித்து தரைமட்டமாக்கிய தெஹிவளை கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்ட சியோல் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கை செய்தி

உலக சாதனைகளில் இணைந்த இலங்கையின் ஆப்பிள் விலை

  • February 27, 2024
  • 0 Comments

சந்தையில் விற்கப்படும் விலைகளின்படி, அதிக விலைக்கு ஆப்பிள் விற்பனை செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது. Numbeo அறிக்கைகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நுகர்வோர் சுட்டெண்ணிற்கமைய, சந்தையில் ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் உலகின் இரண்டாவது நாடாக இலங்கை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிளின் விலை 7.04 அமெரிக்க டொலர்கள் அல்லது 2188 இலங்கை ரூபாவாகும். அந்த தரவரிசைப்படி, உலகிலேயே அதிக விலைக்கு ஆப்பிள் விற்கப்படும் நகரமாக நியூயார்க் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆப்பிளின் […]

ஐரோப்பா

அயர்லந்தில் மரத்தைத் தூக்கி வீசியதால் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்த பெண்

  • February 27, 2024
  • 0 Comments

அயர்லந்தில் பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் மரத்தைத் தூக்கி வீசும் போட்டியில் வெற்றி பெற்றதால் சுமார் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்துள்ளார். 36 வயது கமிலா கிராப்ஸ்கா கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காகப் பணம் கோரி காப்புறுதி நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார். 2017ஆம் ஆண்டு நேர்ந்த அந்தக் கார் விபத்தால் தமது முதுகிலும் கழுத்திலும் அடிபட்டதாக அவர் கூறினார். சுமார் 5 ஆண்டுகளுக்குத் தம்மால் வேலைக்குச் செல்ல முடியாது என்றும் பிள்ளைகளுடன் விளையாட முடியவில்லை என்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட் மோதிரம் வெளியிட தயாராகும் Samsung!

  • February 27, 2024
  • 0 Comments

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான சுற்றுநிருபம்!

  • February 27, 2024
  • 0 Comments

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த முடியாமல் திணறல்

  • February 27, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுகின்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரையில் நாடு கடத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் நாடு கடத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது நிராகரிக்கப்பட்ட அகதிகளை ஜெர்மன் நாட்டை விட்டு நாடு கடத்துவதற்காகன நடவடிக்கைகளை துரிதப்படுத்திக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் சமஷ்டி பொலிஸார் வெளியிட்டுள்ள கருத்தில் கடந்த ஆண்டுகளில் 50 வீதமான நாடு கடத்தல் முயற்சி நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றது. […]

ஐரோப்பா

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

  • February 27, 2024
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் சிறுவன் ஒருவர் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 17 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பமவ் இடம்பெற்றது. 8.30 மணி அளவில் அவரசப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 15 வயதுடைய சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது சிறுவனின் சகோதரனும் அவர்களது தாயாரும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் […]

error: Content is protected !!