இலங்கையில் மீண்டும் ஒரு கொவிட் மரணம் பதிவு!
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றுடன் நிமோனியாக காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், உயிரிழந்ததை அடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற நிலையில் மேற்படி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. யக்கல பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின்போது, அவர் கோவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி […]













