இலங்கை

உயிருக்கு அச்சுறுத்தல்? முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகினார்

  • September 28, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் செப்டம்பர் 23 அன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு […]

விளையாட்டு

அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த அஷ்வின்

  • September 28, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் 371 நாள்கள் இருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர்..!

  • September 28, 2023
  • 0 Comments

விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார். ஃபிரெங்க் ருபியோவும் (Frank Rubio) 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் 6 மாதங்களுக்கு முன் திரும்பவிருந்தனர். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது. 180 நாள் பணியாக இருந்திருக்க வேண்டிய பணி 371 நாட்கள் தங்கும் பணியாக மாறியது. அவர்கள் புதிய விண்கலம் அனுப்பப்படும் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. ருபியோ விண்வெளியில் ஆக நீண்ட காலம் இருந்த அமெரிக்க […]

இலங்கை

நீண்ட விடுமுறை: பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

இன்று ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நீண்ட […]

இலங்கை

விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 28, 2023
  • 0 Comments

திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (28) ,மாலை இடம் பெற்றுள்ளது. கஷ்ட நிலைமை காரணமாக விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு கீழால் உறங்கிக் கொண்டிருந்த கரடி பாய்ந்து தாக்கியதால் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான […]

இலங்கை

இலங்கையில் சிறுமிகளின் ஆபாச காட்சிகளை விற்பனை செய்த இளைஞர் கைது!

  • September 28, 2023
  • 0 Comments

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞன் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய சுமார் 7000 பிரேம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அறிந்திருக்க வேண்டியவை

ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து பிரதி ரூ.10 கோடிக்கு ஏலம்

  • September 28, 2023
  • 0 Comments

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சாா்பியல் கொள்கை, பொது சாா்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 23 அன்று வால்டோர்ஃப் அஸ்டோரியா ஷாங்காயில் ஏலம் நடைபெற்றது. அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சாா்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சாா்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டாா். பிப்ரவரி 3, 1929 அன்று நியூயார்க் டைம்ஸின் சிறப்பு இணைப்பில் […]

இலங்கை

இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதி!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கை துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாக  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாகவும், இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை,  துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் […]

வட அமெரிக்கா

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த அழையா விருந்தாளி… அதிர்ச்சியில் உறவினர்கள்

  • September 28, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கரடி புகுந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நடுங்க வைத்துள்ளது. 15 வயது சாண்டியாகோ எனும் சிறுவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். இதன்போது அவரது தட்டில் Tacos எனும் மெக்சிகோவின் பிரபல உணவு இருந்தது. இந்நிலையில் அவரது உணவு மீது, கரடி ஒன்று திடீரென்று தாவியதால் அச்சத்தில் சிறுவன் தாயாரிடம் தஞ்சமடைந்தான். எனினும் கரடியார் சாண்டியாகோ கை எட்டும் தூரத்தில்தான் இருந்தபோதும், உணவுக்காகவே வந்ததுபோல சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து அமைதியாக வெளியேறிவிட்டது. இந்த சம்பவத்தால் அங்கு […]

இலங்கை

சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கடற்படையினரால் கைது

  • September 28, 2023
  • 0 Comments

மன்னாரை சேர்ந்த மூவர் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று புதன் (27) இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நிலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பல படகுகள் […]

error: Content is protected !!