தக்காளி விற்பனை : 45நாட்களில்.. 4கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி!
நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர், ஒரு சில மாதங்களில் லட்சாதிபதியாகவோ அல்லது கோடீஸ்வரர்களாகவோ மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி (48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. […]













