இலங்கை

கட்டாரில் இரு இலங்கை பிரஜைகள் சடலமாக மீட்பு!

  • June 30, 2023
  • 0 Comments

முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இருவருடைய சடலங்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தில் விசேட கருத்தரங்கு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் போலீஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் செயற்பட்டார். இக்கலந்துரையாடலில் சித்திரவதையிருந்து பாதுகாப்பு என்னும் தலைப்பில் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பிலும், சித்திரவதைக்கு எதிரான தண்டனைகள் தொடர்பிலும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பு பெறுவது […]

ஐரோப்பா

பில்கேட்ஸின் அலுவலகத்தில் நேர்காணலின் போது பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

  • June 30, 2023
  • 0 Comments

தொழிலதிபரான பில்கேட்ஸின் அலுவலகத்தில், பெண் விண்ணப்பதாரர்களிடம் பாலியல் ரீதியான, ஆபசமான கேள்விகள் நேர்காணலின்போது கேட்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்  பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,  பில் கேட்ஸின் தனியார் அலுவலகம் ஒன்று, நேர்காணலின் போது பெண் வேட்பாளர்களிடம் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டதாகக் கூறியுள்ளது. சில பெண் வேட்பாளர்கள் தங்களுடைய கடந்தகால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், தங்கள் தொலைபேசிகளில் நெருக்கமான புகைப்படங்கள் வைத்திருப்பது, ஆபாசத்தில் உள்ள விருப்பங்கள் மற்றும் அவர்களுக்கு […]

இந்தியா

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். முன்னதாக, ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் மற்ற பயணிகளைப் போலவே தனது டிக்கெட்டையும் வாங்கினார். பின்னர் அங்குள்ள நுழைவு வாயிலில் டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றார். பிரதமர் மோடி தானியங்கி எஸ்கலேட்டர் வழியாக சென்று ரயில் வருவதற்காக நடைமேடையில் சிறிது நேரம் காத்திருந்தார். மெட்ரோ ரயில் வந்ததும் பிரதமர் […]

செய்தி

வடகொரியாவில் இனி கணவரை ”ஒப்பா” என்று அழைக்க முடியாது – மீறி அழைத்தால் மரண தண்டனை!

  • June 30, 2023
  • 0 Comments

தென்கொரிய மொழி அல்லது சொல்லகராதியைப் பயன்படுத்த வடகொரியா தடை விதித்துள்ளது. அவ்வாறு யாரேனும் பயன்படுத்தினால் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பேசப்படும் கொரிய மொழி மீதான தேசிய ஒடுக்குமுறையை வட கொரிய தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி தென்கொரிய மொழியை பேசினால், பியோங்யாங் கலாச்சார மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. “ஏற்கனவே தென் கொரிய மொழி பேசும் முறையைப் பழக்கப்படுத்திய […]

பொழுதுபோக்கு

யானை, புலியைத் தொடர்ந்து சிங்கத்தையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்…

  • June 30, 2023
  • 0 Comments

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் சுற்றிப்பார்ப்பதோடு, தத்தெடுக்கும் திட்டத்தையும் பூங்கா நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அங்குள்ள விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அதற்கான பராமரிப்புச் செலவுகளை அளிக்க வேண்டும். அவர்கள் அந்த விலங்குகளுக்கு செலவழிக்கும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன் யானை, புலி போன்ற விலங்குகளை […]

ஆசியா

சீனாவில் தனது ஊழியர்களுக்கு 10 ஆயிரம் யுவான்களை ஐந்து வருடத்திற்கு இலவசமாக வழங்கும் பிரபல நிறுவனம்!

  • June 30, 2023
  • 0 Comments

சீனாவில் பெற்றோர் பண உதவித்தொகையாக 10 ஆயிரம் யுவான்களை வழங்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி  சீனாவின் Trip.com குழுமம், ஜூலை 1 முதல் இந்த திட்டத்தை வழங்க தீர்மானித்துள்ளது. சீனாவில் உள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனம் முன்னெடுத்துள்ள முதல் முயற்சி இதுவாகும். குறித்த நிறுவனமானது 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனமாகும். குறித்த நிறுவனத்தில் பணியாறும்  ஊழியர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்தாண்டுகளுக்கு 10,000 […]

இலங்கை

யாழில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

  • June 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிராக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2023 ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் […]

வட அமெரிக்கா

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட லொரி மீது மோதிய ரயில் ; 16பேர் படுகாயம்

  • June 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரெயில் செல்லும் பாதையில் உள்ள மூர் பூங்கா அருகே தண்ணீர் லொரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது அந்த லொரி மீது ரெயில் மோதி தடம் புரண்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

  • June 30, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் ஆராய பிரதேச செயலக மட்டத்தில் மேன்முறையீட்டு சபையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நடவடிக்கைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார். இதனிடையே அஸ்வெசும நலன்புரி திட்டங்கள் தொடர்பில் இதுவரை 40000 முறைப்பாடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எதிர்வரும் 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை […]